search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சுப்மன் கில் அதிரடி சதம் - நியூசிலாந்து வெற்றி பெற 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    சுப்மன் கில் அதிரடி சதம் - நியூசிலாந்து வெற்றி பெற 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.
    • இந்திய துவக்க வீரரான சுப்மன் கில் சதம் அடிக்க, இந்தியா 20 ஓவர்களில் 234 ரன்களை குவித்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்று பெற்றுள்ளன. இதனால் தொடரை யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு இன்றைய போட்டியில் ஏற்பட்டு இருக்கிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார்.

    சுப்மன் கில்லுடன் ஆடிய ராகுல் திரிபாதி தன் பங்கிற்கு 22 பந்துகளில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 30 ரன்களை விளாசினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்துள்ளது. இதை அடுத்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க இருக்கிறது.

    Next Story
    ×