என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு

வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண் - முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

- இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களை எடுத்தனர்.
- நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியது. முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 176 ரன்களை குவித்து இருந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், அர்தீப் சிங், சிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் முறையே 4 மற்றும் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறி கொடுக்க இந்தியா துவக்கத்திலேயே மூன்று விக்கெட்களை இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் ஜகோப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 20 பந்துகளில் 21 ரன்களை அடித்து பிரேஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து இந்தியா 100 ரன்களை குவிக்கும் முன் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 18 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை எடுத்த இந்தியா எட்டு விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் லூகி ஃபெர்குசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜகோப் டஃபி, இஷ் சோதி ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
