என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வே- அயர்லாந்து போட்டி மழையால் தாமதம்: போட்டி ரத்தானால் ஆஸ்திரேலியாவின் நிலை?
- ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா சிறிய வாய்ப்பு.
- மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
டி20 உலகக் கோப்பையில் "பி" பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் ஜிம்பாப்வே தோல்வியடைய வேண்டும்.
ஆனால் தற்போது மழை பெய்து வரும் நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஜிம்பாப்வே ஒரு புள்ளி பெற்று, இரண்டு வெற்றி, ஒரு முடிவு இல்லை என்பதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.






