என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிமினல் குற்றம்.. ஸ்ரேயஸ் ஐயர் ஆடிய ஷாட் குறித்து யுவராஜ் சிங் தந்தை விமர்சனம்
    X

    கிரிமினல் குற்றம்.. ஸ்ரேயஸ் ஐயர் ஆடிய ஷாட் குறித்து யுவராஜ் சிங் தந்தை விமர்சனம்

    • இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதற்காக அவரை 2 போட்டிகளில் தடைகூட செய்யலாம்.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 190 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    குவாலிபையர் 2-ல் மும்பையின் 203 ரன்கள் என்ற இலக்கை 19 ஓவரில் எட்டிய பஞ்சாப் அணியால் 190 ரன்களை அடிக்க முடியாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றதை ஏற்படுத்தியது. மேலும் அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஷாட் க்ரிமினல் குற்றம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் காட்டமான விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் ஆடிய ஷாட், என்னைப் பொறுத்தவரை கிரிமினல் குற்றம். இதற்காக அவரை 2 போட்டிகளில் தடைகூட செய்யலாம். இவருக்கு மன்னிப்பே கிடையாது.

    என கூறினார்.

    Next Story
    ×