என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் அரைஇறுதி இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்
    X

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் அரைஇறுதி இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

    • 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது.

    கவுகாத்தி:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த 30-ந் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்கியது.

    8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முதல் அரைஇறுதி ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுப்போவது யார்? என்ற ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது. 3 தடவை அரை இறுதியில் தோற்றது. முதல் முறையாக இறுதிப்போட்டி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் கடந்த 3-ந்தேதி கவுகாத்தியில் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 69 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    Next Story
    ×