என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
    X

    பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரங்களும் அடித்தனர்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×