என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து தொடக்க வீரர்கள்
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து தொடக்க வீரர்கள்

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
    • தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர்.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே, டாம் லாதம் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்துள்ளது.

    கடைசி நாளில் 88 ஓவர்களில் 419 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் தொடக்க வீரர்கள் என்ற புதிய சாதனையை டாம் லேதம், கான்வே ஜோடி படைத்தது.

    இந்த டெஸ்டில் கான்வே (227, 100), லேதம் (137,101) ஆகியோர் சதம் விளாசி இருந்தனர்.

    Next Story
    ×