என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    5 அணிகள், அடுத்தடுத்து போட்டிகள் - 2025 போட்டி விவரங்களை வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ்
    X

    5 அணிகள், அடுத்தடுத்து போட்டிகள் - 2025 போட்டி விவரங்களை வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ்

    • ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    • இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் விளையாடும் போட்டி விவரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தப் போட்டிகள் ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு அணிகளும் மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

    இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுடன் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி செப்டம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பபயணம் செய்து விளையாடுகிறது. இதில் இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    வங்கதேசத்துடன் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    Next Story
    ×