என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்த வைபவ் சூர்யவன்ஷி- வைரலாகும் வீடியோ
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளையும் வென்று அசத்தியது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கும் இந்தியா அண்டர்-19 அணிக்கும் இடையிலான முதல் யூத் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள இயான் ஹீலி ஓவலில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 பந்தில் 113 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும்.
அவரது அதிரடியான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் இந்திய அணிக்கான தேர்வில் சீக்கிராமாக இடம் பிடிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.






