என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எதிர்பார்த்ததை விட 400 ரன்கள் அதிகம்- டிராவிஸ் ஹெட் நெகிழ்ச்சி
- நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார்.
- தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைக்கவில்லை.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக 163 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார். மேலும் ஆஷஸ் தொடர் ஒன்றில் 600 ரன்னுக்கு மேல் எடுத்த 9-வது தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதிர்பார்த்ததை விட அனேகமாக 400 ரன்கள் அதிகம் எடுத்திருப்பதாக நினைக்கிறேன். மிடில் வரிசையில் பேட் செய்யும் எனக்கு இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நான் நன்றாக பேட் செய்வதாக உணர்கிறேன். முடிந்த வரை தொடர்ந்து சீராக ரன் எடுக்க முயற்சிக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைத்திருக்கமாட்டேன் என்பதில் சந்தேகமில்லை. பெரிய ஸ்கோர் குவித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது.
என ஹெட் கூறினார்.






