என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை வெற்றி எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும்: ஹர்திக் பாண்ட்யா
- இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைக்கான அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார்.
- 2024 மற்றும் தற்போதைய டி20 உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் இந்தியாதான் கைப்பற்றியது. கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் பட்டத்தையும் இந்தியாதான் வென்றது. இந்த மூன்று தொடரையும் வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார். இடம் பிடித்திருந்தது மட்டுமல்லாமல் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றது குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பையை பார்படோசில் வென்ற பிறகு, எனக்கு நானே ஒரு வாக்குறுதி செய்து கொண்டேன். அது, எந்தவொரு தொடரில் நான் விளையாடினாலும் வெற்றிக்காக விளையாட வேண்டும். சாம்பியன் கோப்பையை தூக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அகமதாபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான இந்த வெற்றி, நான் எனக்கு அளித்த வாக்குறுதி நிஜமாகிவிட்டது என்பதற்கான சான்றாகும். அணியின் ஆதிக்கத்தில் இது ஜஸ்ட் தொடக்கம்தான்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.






