என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பை: அரையிறுதி, இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்
    X

    டி20 உலகக்கோப்பை: அரையிறுதி, இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

    • இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன

    இந்நிலையில் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ரசிகர்கள் tickets.t20worldcup.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

    முதலாவது அரையிறுதி மார்ச் 4 ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி மார்ச் 5 ஆம் தேதியும், இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்பதால் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தகுதி நிலையைப் பொறுத்து மைதானங்கள் மாறும்.

    டிக்கெட் வாங்கிய மைதானத்தில் போட்டி நடைபெறவில்லை என்றால், அதற்கான தொகை உங்கள் கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.

    சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, தனது அடுத்த இரு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

    Next Story
    ×