என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பையில் இதுதான் எங்களுக்கான சிறந்த வழி- பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா
- நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம்.
- இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு ஏதிரான குரூப் லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்திய போட்டியை புறக்கணித்தது தொடர்பாக பாகிஸ்தான் அணியை நோக்கி விமர்சனம் வருவதை எப்படி சமாளிப்பீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சல்மான ஆகா அளித்த பதில் பின் வருமாறு:-
நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம். இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை. எங்கள் அணிக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை உண்மையிலேயே நாங்கள் பார்க்க விரும்பவில்லை. எங்களால செய்யக்கூடிய சிறந்த விசயம் இதுதான் என நினைக்கிறேன்.
ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்ததால் நாங்கள் உண்மையிலேயே வருத்தம் அல்லது அதுபோன்ற ஒன்றை உணர்ந்தது இல்லை. எனினும், விளையாட்டிற்கு இது நல்லது அல்ல. இதுபோன்ற விசயங்கள் நடைபெறக்கூடாது.
சிறுவயதில் வளர்ந்து வரும்போது, ஆட்டத்தை மேம்படுத்துவதற்குத் தேவையானதை மக்கள் செய்வதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். ஓரளவிற்கு, நாங்கள் முன்மாதிரிகளாக இருக்கிறோம். நீங்கள் அப்படிச் செய்தால், குழந்தைகளும் இதைக் கற்றுக்கொள்வார்கள், நாளை அவர்களும் அதே காரியங்களைச் செய்வார்கள்.
ஆகவே, இதுபோன்ற விஷயங்கள் நடக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் முன்மாதிரிகளைப் பற்றி யோசித்தால், முன்மாதிரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.






