என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் பங்கேற்க சென்னை வந்த ஜிம்பாப்வே அணியினர்
- சூப்பர் 8 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
- வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் (பிப். 26) சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. மறுப்பக்கம் ஜிம்பாப்வே அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால், இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தது. இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ஜிம்பாப்வே அணியினர் சென்னை வந்துள்ளனர். சென்னை வருகை தந்த ஜிம்பாப்வே அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






