என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு
- இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் க்ரூப் 2-இல் இடம்பெற்றுள்ளன.
- இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் க்ரூப் 2-இல் இடம்பெற்றுள்ளன. இதுவரை இவ்விறு அணிகளும் ஒரு போட்டியில் விளையாட இருந்தன. எனினும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விளையாடிய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தோல்வியை தழுவியது. நெட் ரன் ரேட் முறையில் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் நோக்கில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.






