என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய வீரர்களிடம் ரப்பர் பேட்- இலங்கை வீரர் பரபரப்பு புகார்
    X

    இந்திய வீரர்களிடம் ரப்பர் பேட்- இலங்கை வீரர் பரபரப்பு புகார்

    • இந்த பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது.
    • இது எல்லா வீரர்களுக்கும் தெரியும்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா- இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்திய அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் அதிரடி பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளுக்கு பயத்தை கொடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளது என இலங்கை அணி வீரர் பனுகா ராஜபக்ச கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளது. மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவதை விட அது சிறப்பானது. அது எப்படி சாத்தியம் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. இந்த பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது. இது எல்லா வீரர்களுக்கும் தெரியும் என அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×