என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
    X

    டி20 உலகக் கோப்பை 2026: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

    • இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 1 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    சூப்பர் 8 சுற்றின் க்ரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 2 மற்றும் 1 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 1 புள்ளி மற்றும் 0.000 நெட் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    இதனால் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற சூழலில் களமிறங்குகிறது. இன்றைய சூப்பர் 8 சுற்றுப் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×