என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பிய நோர்ஜே: ஒருநாள், டி20 தொடர் அணி அறிவிப்பு
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெறுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்த உடன் இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் போட்டிகளும், இறுதியாக டி20 தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக பவுமாவும், டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:
ஒருநாள் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நான்ட்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ரூபின் ஹெர்மன், கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம், லுங்கி நிகிடி, ரியான் ரிக்கல்டன், பிரெனெலன் சுப்ரயன்.
டி20 அணி:
மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டோனி டி சோர்ஜி, டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆன்ரிச் நோர்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.






