என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2026 IPL தொடருக்கு முன்பு வரை ஸ்ரேயாஸ் எந்த போட்டியிலும் ஆட முடியாது- வெளியான அதிர்ச்சி தகவல்
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஸ்ரேயாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் அய்யர். ஒருநாள் அணியின் துணை கேப்டனான அவருக்கு கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் கேட்ச் பிடித்தபோது இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மண்ணீரலில் ரத்த கசிவு உருவானது. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கு முன்பு வரை அவரால் எந்த போட்டியிலும் ஆட முடியாது. ஆஸ்திரேலிய தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் 2 ஆட்டத்தில் 72 ரன் எடுத்தார். இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் 496 ரன்கள் எடுத்தார். சராசரி 49.60 ஆகும். 5 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 79 ரன் எடுத்தார்.
இந்தியா-தென்ஆப்பி ரிக்கா இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரையும் நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.






