என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி- இந்திய ஆடும் லெவனை அறிவித்த முன்னாள் வீரர்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி- இந்திய ஆடும் லெவனை அறிவித்த முன்னாள் வீரர்

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவுக்கு இடம் அளிக்கவில்லை.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் ஒருநாள் தொடரும் அதன்பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவித்துள்ளார்.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். 3-வது வரிசையில் வழக்கம் போல விராட் கோலியும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஆல் ரவுண்டராக நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ளார்.

    பந்து வீச்சாளரை பொறுத்தவரையில் பும்ரா இல்லாததால் சிராஜ் தலைமை தாக்குவார். அவர தலைமையில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆகாஷ் சோப்ராவின் இந்திய லெவன்:-

    சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

    Next Story
    ×