என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கேரளா கிரிக்கெட் லீக்: அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்
- கடந்த வருடம் 7.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
- அடிப்படை விலை ரூ. 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 26.8 லட்சம் ரூபாய்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
தமிழ்நாடு, கர்நாடகா, மேற்க வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டி20 லீக் தொடர் நடத்தப்படுகின்றன. அதேபோன்று கேரள மாநில கிரிக்கெட் சங்கமும் கடந்த வருடத்தில் இருந்து டி20 லீக்கை நடத்துகிறது. இதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
கேரளா கிரிக்கெட் லீக்கின் கடந்த வருடம் ஏலத்தில் சஞ்சு சாம்சன் திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியால் 7.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இந்த வருடம் அவருடைய அடிப்படை விலை 3 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல அணிகள் இவரை எடுக்க போட்டியிட்டதால் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.