என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சதம் அடித்தால் வெற்றியே இல்லை.. SENA நாடுகளில் தொடரும் ரிஷப் பண்டின் சோகம்
- SENA நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6 சதம் விளாசியுள்ளார்.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமாக இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சிலும் 2-வது இன்னிங்சிலும் இந்திய வீரர் ரிஷ்ப பண்ட் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆனால் இவர் SENA நாடுகளில் சதம் அடித்து இந்தியா வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் அவரது சோகம் இந்த டெஸ்ட்டிலும் தொடர்கிறது.
அதன்படி SENA நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை.
2019-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டீரா செய்த நிலையில், மற்ற 5 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இதில் 4 சதம் இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ளார். ஒரு டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






