என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை
- 27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார்.
- இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து இருந்தது. ஆலி போப் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பென் டக்கெட் 62 ரன் எடுத்தார். பும்ரா 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்து 262 ரன்கள் பின்தங்கி, கைவசம் 7 விக்கெட்டுடன் இருக்கிறது.
27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார். வேறு எந்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் இங்கிலாந்தில் 3 சதம் அடித்தது கிடையாது.
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப்பண்ட் பெற்றார். 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இங் கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 140 ரன் எடுத்தார். ரிஷப் பண்ட் 7 ரன்னில் சாதனையை தவற விட்டார்.
ரிஷப்பண்ட் 52-வது ரன்னை தொட்டபோது 3 ஆயிரம் ரன்னை எடுத்தார். அவர் 3082 ரன் எடுத்துள்ளார்.
ரிஷப்பண்ட் ஸ்கோரில் (134 ரன்) 6 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கும் ஷேவாக், டோனியை சமன் செய்தார். ஹர்திக் பாண்ட் யா 7 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளார். 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதி ராக காலே மைதானத்தில் அவர் இதை எடுத்தார்.
லீட்ஸ் டெஸ்டில் 3 இந்தயர்கள் சதம் அடித்தனர். வெளிநாட்டில் இந்தியாவுக்கு இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (1985-86), இலங்கை (1997), இங்கிலாந்து (2002), வங்கதேசம் (2007), ஆகிய நாடுகளில் 3 இந்திய வீரர்கள் சதம் அடித்து இருந்தனர்.






