என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: பந்தை மாற்ற கோரிக்கை வைத்த இந்திய வீரர்கள்.. நிராகரித்த நடுவர்.. பண்ட் செய்த செயல் வைரல்
    X

    வீடியோ: பந்தை மாற்ற கோரிக்கை வைத்த இந்திய வீரர்கள்.. நிராகரித்த நடுவர்.. பண்ட் செய்த செயல் வைரல்

    • இங்கிலாந்து அணி 3-ம் நாள் உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது.
    • 60 ஓவர்களுக்கு பிறகு பந்து முட்டை வடிவமாக மாறியது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் 60 ஓவர்களுக்கு பிறகு பந்து முட்டை வடிவமாக மாறியது. அதனால் இந்திய வீரர்கள் பும்ரா, கில், ரிஷப் பண்ட், சிராஜ் ஆகியோர் பந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை சோதித்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக உள்ளதாக தெரிவித்து வேறு பந்தை அனுமதிக்கவில்லை.

    மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் கேட்டபோது நடுவர் முடியாது என்றதால், கடுப்பான பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×