என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆடும் லெவனில் அர்ஷ்தீப் சிங் எங்கே? அஸ்வின் கேள்வி
    X

    ஆடும் லெவனில் அர்ஷ்தீப் சிங் எங்கே? அஸ்வின் கேள்வி

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 3 பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது.
    • அர்ஷ்தீப் சிங் இடம் பெறாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா உடன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது. சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (வி.கீ.) ஆகிய பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியுள்ளது.

    இந்திய டி20 அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் விளங்கி வருகிறார். அவருக்கு மற்ற வடிவிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்றைய போட்டியில் கூட முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் இந்தியா, இடது கை பந்து வீச்சாளரான அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் "அர்ஷ்தீப் சிங்கை எங்கே? அவ்வளவுதான்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    26 வயதான அர்ஷ்தீப் சிங் 72 டி20 போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×