என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி டிராபி: 150+ ரன்களை கடந்த விமல் குமார், பிரதோஷ் ரஞ்சன் பால்- முதல் நாளில் தமிழ்நாடு 399/2
    X

    ரஞ்சி டிராபி: 150+ ரன்களை கடந்த விமல் குமார், பிரதோஷ் ரஞ்சன் பால்- முதல் நாளில் தமிழ்நாடு 399/2

    • விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.
    • விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபி 2025-26 தொடரின் 2ஆவது போட்டி இன்று தொடங்கியது. தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

    பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    முதல் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கெதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    Next Story
    ×