என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை காலிறுதிகள்: முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் சுருண்ட ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர்
- ஜார்க்கண்ட் 235 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
- ஜம்மு-காஷ்மீர் 194 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட்- உத்தரகாண்ட் அணிகள் மோதின.
ஜார்க்கண்ட்- உத்தரகாண்ட்
டாஸ் வென்ற உத்தரகாண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜார்க்கண்ட் அணி முதலில் களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் சிங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆதித்யா சிங் 83 ரன்கள் எடுக்க ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உத்தராண்ட் பந்து வீச்சாளர் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் உத்தரகாண்ட் முதல் இன்னிங்சை தொடங்கியது, இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்- மத்திய பிரதேசம்
2-வது காலிறுதியில் ஜம்மு-காஷ்மீர்- மத்திய பிரதேசம் அணிகள் விளையாடுகின்றன. மத்திய பிரதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 194 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் கஜூரியா 60 ரன்கள் சேர்த்தார். 10-து வீரராக களம் இறங்கிய யுத்வீர் சிங் 41 ரன்கள் சேர்த்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மத்திய பிரதேச அணி பந்து வீச்சாளர் குல்தீப் சென் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சை தோடங்கியது. இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
ஆந்திரா- பெங்கால்
3-வது காலிறுதியில் ஆந்திரா- பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்கால் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆந்திரா முதலில் களம் இறங்கியது. ஆந்திரா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ரிக்கி புய் 83 ரன்களும், ரஷீத் 46 ரன்களும், ஸ்ரீகர் பாரத் 47 ரன்களும் சேர்த்தனர்.
மும்பை கர்நாடகா
4-வது காலிறுதியில் மும்பை 120 ரன்னில் சுருண்ட நிலையில், கர்நாடகா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 54 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.






