என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முஷீர் கான் சொன்ன 2 வார்த்தையால் ஆத்திரம் அடைந்த பிரித்வி ஷா
- மும்பை, மகாராஷ்டிரா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் புனேவில் நடைபெற்றது.
- சிறப்பாக ஆடிய மகாராஷ்டிரா அணியின் பிரித்வி ஷா 220 பந்தில் 181 ரன்கள் குவித்தார்.
மும்பை:
ரஞ்சிக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் புனே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக ஆடிய மகாராஷ்டிரா அணியின் பிரித்வி ஷா 220 பந்தில் 181 ரன்கள் குவித்தார். மேலும், ஆசின் குல்கர்னியுடன் இணைந்து 305 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
இந்நிலையில், சிறப்பாக விளையாடிய பிரித்விஷா அவுட்டானபோது, அவரை கிண்டல் செய்யும் விதமாக 'தேங்க் யூ' என முஷீர் கான் நக்கல் செய்துள்ளார். இவர் சர்பராஸ் கானின் சகோதரர் ஆவார்.
ஏற்கனவே மும்பை அணியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் பிரித்வி ஷாவால் அவர் சொன்ன தொனியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரை தாக்க முயன்றார். மேலும் மும்பை வீரர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கள நடுவர் பிரித்வி ஷாவை தடுத்து அனுப்பிவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.






