என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் ரெட் பந்து அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அசார் மஹ்மூத் நியமனம்
- அசார், 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
- 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அந்த அணியில் முக்கிய வீரராக இவர் இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் மோசமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அந்த அணியில் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாறி கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்கள் கேரி கிரிஸ்டன், ஜேஸன் கில்லெஸ்ப்பி ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இருவரும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் 8 மாதங்களிலே ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார்.
மேலும், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்றவர். 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அசார் மஹ்மூத் அந்த அணியில் முக்கிய வீரராக இருந்தார்.
இவர் 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.






