என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.
முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சல்மான் ஆகா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ரஷீத்கான் அதிரடியாக ஆடி 16 பந்தில் 5 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






