என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது.
கவுகாத்தி:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. சோபி டெவைன் 63 ரன்னும், புரூக் ஹாலிடே 69 ரன்னும், மேடி க்ரீன் 25 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் ரெபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக பாஹிமா கதுன் 34 ரன்னும், ரெபேயா கான் 25 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வங்கதேசம் 39.5 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லீ தகுகு தலா 3 விக்கெட்டும், ரோஸ்மேரி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.






