என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சோனு யாதவ் ஹாட்ரிக்: திருச்சியை வீழ்த்தியது நெல்லை
- நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.
கோவை:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 3-வது லீக் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.
வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆர். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 16 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 21 பந்தில் 41 ரன் குவித்தார். சந்தோஷ் குமார் 45 ரன்னில் அவுட்டானார். ஹரீஷ் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.






