என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மீண்டும் ஆர்சிபி அணியில்: ஏபி டி வில்லியர்ஸ் சூசகம்..!
    X

    மீண்டும் ஆர்சிபி அணியில்: ஏபி டி வில்லியர்ஸ் சூசகம்..!

    • மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம்.
    • என்னுடைய இதயம் ஆர்சிபி-யேடு இருக்கிறது. எப்போதும் இருக்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆர்சிபி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் குவித்துள்ளார்.

    எதிர்காலத்தில் ஆர்சிபி அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக பதவிக்கான வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன். அதன்மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம். தொழில்முறை திறனுடன், சீசன் முழுவதும் ஈடுபடுவது உண்மையிலேயே ட்ரிக்கியானதாக இருக்கும். அந்த நாளும் முடிந்து விட்டன என நம்புகிறேன். என்னுடைய இதயம் ஆர்சிபி-யோடு இருக்கிறது. எப்போதும் இருக்கும். பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பதவி எனக்கானது என்று ஆர்சிபி உணர்ந்தால், என்னுடைய நேரம் வரும்போது, நான் தயாராக இருப்பேன். இது நிச்சயமாக ஆர்சிபிக்காக இருக்கும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

    டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் 2011ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியில் இடம் பிடித்திருந்தார்.

    Next Story
    ×