என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை கொடுக்க தயார்.. ஆனால்.. மோசின் நக்வி வைத்த ட்விஸ்ட்
- ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் எனவும் ஆனால் ஒரு கண்டிசன் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறினார்.
மேலும் முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்கள் பதக்கங்களைப் பெறுவார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நக்வி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளைக் கருத்தில் கொண்டால், அத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது..






