என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் யார்?- சிராஜ் உடன் மோதும் மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள்
    X

    ஐசிசி-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் யார்?- சிராஜ் உடன் மோதும் மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள்

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் ஹென்றி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவருடன் இறுதிப் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடம் இடம் பிடித்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

    இறுதிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது.

    Next Story
    ×