என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இறுதிப் போட்டியில் தோல்வி: மிட்செல் சான்ட்னெரை சாடிய முகமது ஆமிர் | T20 World Cup Final
    X

    இறுதிப் போட்டியில் தோல்வி: மிட்செல் சான்ட்னெரை சாடிய முகமது ஆமிர் | T20 World Cup Final

    • நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுக்கனும்.
    • அவர்கள் பந்தை வைடாக வீசி, சிக்சர்கள் அடிக்க அனுமதித்தனர்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர், இந்தியா மோதும் போட்டியின்போது இந்தியா தோல்வியடையும் எனக் கூறுவார். ஆனால், இந்தியா வெற்றி பெற்றுவிடும். பின்னர் எதிரணியை குற்றம் கூறுவதற்கான காரணத்தை கண்டறிவார்.

    அதேபோல்தான் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடையும் எனக் கூறியிருந்தார். ஆனால் இந்தியா 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெரின் யுக்தியை முகமது ஆமிர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஆமிர் கூறுகையில் "நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுக்கனும். அவர்கள் பந்தை வைடாக வீசி, சிக்சர்கள் அடிக்க அனுமதித்தனர்.

    பந்து வீச்சு மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சியான மாற்றம் விசித்திரமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அபிஷேக் சர்மா திணறுகிறார் என்று உங்களுக்கு தெரியும்போது, நிங்கள் ஜேக்கப் டஃபியை கொண்டு வருகிறீர்கள்.

    நியூசிலாந்து அணி இதுபோன்று நெருக்கடிக்கு உள்ளானதை, இதுவரை நான் பார்த்ததில்லை. 2005-ல் இருந்து அவர்கள் பார்த்து வருகிறேன். இதுபோன்று நெருக்கடிக்கு ஆளானதை நான் பார்க்கவே இல்லை" என்றார்.

    Next Story
    ×