என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உண்மையான கேம் சேஞ்சர் ஹர்ஷித் ராணா: புகழாரம் சூட்டிய ஸ்ரீகாந்த்
- உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான்.
- ஹர்ஷித் ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி உறுதியாக தோல்வியடையும் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷித் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் விளாசினார். அவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஹர்ஷித் ராணாதான் உண்மையான கேம் சேஞ்சர் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான். ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள். ராணாவின் பேட்டிங்கை பார்த்து நான் வியந்து போனேன். அவர் ஒரு வேறுபட்ட மட்டத்தில் விளையாடினார். அவர்கள் உண்மையில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். அவர் சிரமமின்றி சிக்ஸர்களை அடித்தார். அவருடைய பேட்டிங் அபாரமாக இருந்தது.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.






