என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்- பென் ஸ்டோக்ஸ்
- இந்த மைதானத்தில் ஏற்கனவே சில நல்ல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன.
- டெஸ்ட் போட்டியில் 5-வது நாள் கடைசி மணி நேரம் வரை போட்டி சென்றது மிகச் சிறப்பாக இருந்தது.
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கடைநிலை வீரர்களை விரைவாக வீழ்த்தியது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த மைதானத்தில் ஏற்கனவே சில நல்ல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. அதில் இந்த வெற்றியும் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த டெஸ்ட் போட்டியில் 5-வது நாள் கடைசி மணி நேரம் வரை போட்டி சென்றது மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக கருதினோம்.
இந்த மைதானத்தில் பேட்டிங்குக்கும் சரி, பந்து வீச்சுக்கும் சரி நல்ல சாதகம் இருந்ததனால் சிறப்பாக செயல்பட முடிந்தது. 4-வது இன்னிங்சில் இலக்கை நோக்கி செல்வது நிச்சயம் அழுத்தமான ஒரு வியசம்தான். ஆனாலும் எங்களது அணியின் துவக்க வீரர்களான ஜேக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.
அவர்களது பார்ட்னர்ஷிப் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. பந்துவீச்சிலும் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் கடைநிலை வீரர்களை மிக விரைவாக வீழ்த்தியதான் நாங்கள் அவர்களை சேசிங் செய்வதற்கு வசதியாக இருந்தது.
இந்த தொடரினை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி. இன்னும் அடுத்த நான்கு போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.
என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.






