என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: திடீரென திறந்த கார் கதவு- ஜம்மு ஜாஷ்மீரின் இளம் கிரிக்கெட் வீரர் மரணம்
    X

    வீடியோ: திடீரென திறந்த கார் கதவு- ஜம்மு ஜாஷ்மீரின் இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

    • ஜம்மு-காஷ்மீரின் ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரராக ஃபரீத் ஹுசைன் இருந்தார்.
    • ஃபரீத் ஹுசைன் ஒரு சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரராக ஃபரீத் ஹுசைன் இருந்தார். அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, தனது திறமையால் பிரபலமானவராக அறியப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் ஃபரீத் ஹுசைன் ஒரு சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திடீரென உரிமையாளர் திறந்ததால் அந்த கதவில் மோதி, அவர் கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.

    உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அலட்சிய செயல்களால் ஒரு உயிர் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×