என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
- முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜடேஜா 89 ரன்களும் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து, சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை ஜெயிஸ்வால் முறியடித்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 21 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது.
இருப்பினும், 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக் உடன் ஜெயிஸ்வால் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.