என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்
- இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.
- இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் போட்டியில் 101 ரன்கள் குவித்து இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.






