என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த இத்தாலி வீரர்
- இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இத்தாலி வீரர் பென் மனென்டி 31 பந்துகளில் 52 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அரை சதம் அடித்த முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Next Story






