என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ENGvIND: 5-வது டெஸ்டுக்கான இந்திய ஆடும் லெவனை கணித்த இர்பான் பதான்
- முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை.
- 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். அதில் முதல் 4 வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. 5-வது வரிசையில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார்.
கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் இர்பான் பதான் தனது அணியில் வாய்ப்பு வழங்கிய நிலையில் அன்ஷூல் கம்போஜை அணியில் இருந்து நீக்கியுள்ளார்.
மேற்கொண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜை தேர்வு செய்துள்ள நிலையில் அறிமுக வீரர் ஆர்ஷ்தீப் சிங் அல்லது பிரஷித் கிருஷ்ணா லெவனில் இடம்பிடிக்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.
இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.






