என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஈ சாலா கப் நம்து!... பெங்களூருவில் வெற்றி பேரணி நடத்தும் RCB வீரர்கள்
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.






