என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல சி.எஸ்.கே. அணிக்கு வாய்ப்பு உள்ளது - மைக் ஹசி நம்பிக்கை
    X

    ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல சி.எஸ்.கே. அணிக்கு வாய்ப்பு உள்ளது - மைக் ஹசி நம்பிக்கை

    • ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது
    • சி.எஸ்.கே. அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், தொடர் தோல்விகள் குறித்து பேசிய சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி "நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். எனினும் ஒரு வெற்றி எங்களது மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்புகிறேன் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும். ப்ளே ஆப் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை செய்ய முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×