என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அன்கேப்டு ரூல் டோனிக்காக மாற்றப்பட்டதா? ஐபிஎல் தலைவர் ஓபன் டாக்..!
- ஒவ்வொரு அணியும் டோனியை தங்களது அணியில் தேர்வு செய்யவே விரும்பும்.
- ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகி வருகின்றனர்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்ற கேள்வி நீண்ட காலம் இருந்து வந்தது. இதற்கான பதில் சமீபத்தில் தெளிவுப்படுத்தப்பட்டது. மேலும், வீரர்களை தக்கவைப்பது தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அன்கேப்டு விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
இந்த விதியின் மூலம் எம்எஸ் டோனி அடுத்த சீசனில் விளையாடுவதற்கான சூழல் உருவானது. இந்த நிலையில், டோனியை மீண்டும் விளையாட வைக்கத்தான் அன்கேப்டு விதி கொண்டுவரப்பட்டது என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இது குறித்து ஐபிஎல் தலைவர் அருன் துமால் கூறும் போது, "ஒரு போட்டிக்கு திட்டமிடுதல் வரும் போது, டோனியை விட சிறந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் கேப்டு வீரராக இருந்தாலும், அன்கேப்டு வீரராக இருந்தாலும், அவர் எந்த தொகைக்கு கிடைத்தாலும் ஒவ்வொரு அணியும் டோனியை தங்களது அணியில் தேர்வு செய்யவே விரும்புவர். எம்.எஸ். டோனி இந்த அன்கேப்டு வீரர் விதிக்கு பொருந்துவார் என்று நான் நினைக்கவில்லை."
"இது எங்களின் அனைத்து வீரர்களுக்குமான விஷயம் ஆகும். ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகி வருகின்றனர், பல மூத்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வருகின்றனர். எனினும், அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் தகுதி பெற்றுள்ளனர்."
"பியூஷ் சாவ்லா, அமித் மிஷ்ரா போன்ற வீரர்கள் தற்போதும் ஐபிஎல்-இல் விளையாடி வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியில் இருந்து வெளியேறிவிட்டனர், ஆனாலும் ஐபிஎல் தொடரில் சிறந்து விளையாடி வருகின்றனர். அன்கேப்டு விதிமுறை கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டி, ஐபிஎல்-இல் விளையாட தொடர்ந்து தங்களை தயாராக வைத்துக் கொள்ளும் அனைத்து வீரர்களுக்கானது ஆகும்," என்று தெரிவித்தார்.






