என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4-வது முறையாக சஞ்சு சாம்சன் ஏமாற்றம்..!
- முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
- இன்று 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
Next Story






