என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடிலெய்டு டெஸ்ட்: இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கவாஸ்கர் அட்வைஸ்
    X

    அடிலெய்டு டெஸ்ட்: இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

    • இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
    • பின்னர் 33 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா கை ஓங்கியுள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் 33 ஓவர்கள் பந்து வீசியும் 1 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்த முடியவில்லை.

    இந்த நிலையில் பேட்ஸ்மேன்களை எவ்வளவு விளையாட வைக்க முடியுமோ, அந்த அளவிற்கு விளையாட வைக்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "பேட்ஸ்மேன்களை எவ்வளவு விளையாட வைக்க முடியுமோ, அந்த அளவிற்கு விளையாட வைக்க வேண்டும். அப்படி விளையாட வைத்தால்தான், உங்களால் விக்கெட் வீழ்த்த முடியும்.

    இரண்டு மூன்று பந்துகளை ஸ்டம்பிற்கு வெளியே (outside) வீச வேண்டும். அதன்பிறகு பந்தை உள்ளே கொண்டு வர வேண்டும். பெர்த் டெஸ்டில் லபுசேன் மற்றும் மெக்ஸ்வீனி ஆகியோருக்கு எதிராக பும்ரா செய்தது போன்ற செய்ய வேண்டும். பிங்க் பந்தை இந்திய பந்து வீச்சாளர்கள் போதிய அளவிற்கு பயன்படுத்தவில்லை" என்றார்.

    Next Story
    ×