என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா?... வைபவ் சூர்யவன்ஷி வயது குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்
    X

    இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா?... வைபவ் சூர்யவன்ஷி வயது குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
    • U-19 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 67 ரன்கள் விளாசினர்.

    கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர் வைபவ் சூர்யவன்ஷி. இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. இடது கை பேட்ஸ்மேனான இவருக்கு 13 வயதுதான் ஆகிறது.

    சிறு வயதில் தனது அபாரமான பேட்டிங் திறமை காரணமாக ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்டார். நேற்றுடன் முடிவடைந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.

    இலங்கை அணிக்கு எதிராக 67 ரன்கள் விளாசினர். இதில் ஐந்து பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். சில சிக்சர்கள் இமாலய சிக்ஸ் ஆகும்.

    இந்த நிலையில் 13 வயது சிறுவனால் இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜுனைத்கான் கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யவன்ஷி சிக்ஸ் அடிக்கும் வீடியோவை பகிர்ந்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது இருக்கும் என பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரது தந்தை வயது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    சூர்யவன்ஷிக்கு எட்டரை வயது இருக்கும்போது பிசிசிஐ-யில் எலும்பு சோதனைக்கான சென்றா். அவர் ஏற்கனவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ளார். எதையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர் வயது தெரிந்து கொள்ளும் டெஸ்டிற்கு மீண்டும் உட்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×