என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை 2025: சாதனை படைத்த இந்தியா- இலங்கை போட்டி
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 269 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரசிகர்கள் வருகை தந்தது சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் 22,843 பேர் வருகை தந்துள்ளனர்.
இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா மகளிர்- பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய போட்டியில் 15,935 பேர் கலந்து கொண்டதே சாதனையாக இருந்தது.






